குமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ராஜசேகர் (39) - தங்கம்( 37). இவர்களுக்கு ராகுல் (10) என்ற மகனும், தனுஷியா (9)என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் தங்கத்தின் அம்மா கமலம் ஆகியோரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
மதுபழக்கத்திற்கு அடிமையான ராஜசேகரனால், கடந்த ஒருவாரமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றும் (செப்.21) ராஜசேகரன் மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்ததால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ராஜசேகர் வீட்டிலிருந்த அரிவாளால் அவரது மனைவியை வெட்டி கொலை செய்துள்ளார். இதையடுத்து அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, தம்பதியர் இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த இரணியல் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:கோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த இருவருக்கு அடி, உதை!