தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை- நாகர்கோவில்; 3 மணி நேரத்தில் வந்த கிட்னி!

விபத்தில் உயிரிழந்த இளைஞரின் சிறுநீரகம் மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் 3 மணி நேரத்தில் நாகர்கோவில் கொண்டு வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு பொருத்தும் அறுவை சிகிச்சை நடந்து வருகிறது.

3 மணி நேரத்தில் வந்த கிட்னி
3 மணி நேரத்தில் வந்த கிட்னி

By

Published : Oct 7, 2020, 6:10 PM IST

Updated : Oct 7, 2020, 6:19 PM IST

கன்னியாகுமரி: சிகிச்சைக்காக மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு மூன்று மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் சிறுநீரகம் கொண்டு வரப்பட்டது.

மதுரையை சேர்ந்த வேல்முருகன் (27) என்ற இளைஞர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவரது கிட்னியை தானம் செய்ய உறவினர்கள் விரும்பினர். இந்நிலையில் நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனையில் கிட்னி மாற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பறக்கையை சேர்ந்த வெங்கடேஷ் (43) என்பவருக்கு இந்த கிட்னியை பொருத்துவதற்காக மதுரையிலிருந்து மூன்று மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது.

3 மணி நேரத்தில் வந்த கிட்னி

இதற்காக வழிநெடுகிலும் உள்ள போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிக்க ஆங்காங்கே போக்குவரத்து காவலர்கள் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மருத்துவமனை வந்தடைந்தது.

இதனையடுத்து கிட்னியை வெங்கடேஷுக்கு பொருத்தும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிட்னியை மதுரையிலிருந்து மூன்று மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலமாக மின்னல் வேகத்தில் கொண்டு வந்த ஓட்டுநரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதையும் படிங்க: அம்மனாங்குட்டை பகுதியில் குப்பைகளை எரிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

Last Updated : Oct 7, 2020, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details