கேரளாவில் ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கேரளா மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளையுடன் நிறைவடைவதால் கடந்த சில தினங்களாகவே கேரளா சுற்றுலா பயணிகளின் கூட்டம் கன்னியாகுமரியில் அலைமோதுகிறது. திருவோணம் பண்டிகை அன்று கன்னியாகுமரியில் ஓரளவு கூட்டம் மட்டுமே காணப்பட்டது.
குமரிக்கு படையெடுக்கும் கேரள மக்கள்! - கன்னியாகுமரியில் குவிந்த கேரள மக்கள்
கன்னியாகுமரி: ஓணம் பண்டிகையின் தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு கேரள சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
![குமரிக்கு படையெடுக்கும் கேரள மக்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4434839-thumbnail-3x2-knk.jpg)
kanniyakumari
kerala-tourist-celeberated-onam-in-kanyakumari-with-special-sunrise-visit
ஆனால், நேற்று முதல் கேரளா சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் வரலாறு காணாத அளவில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் முக்கடல் சங்கமத்தில் ஒன்று கூடி சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தனர். இதனால் கடற்கரைப்பகுதி மற்றும் 16 கால் மண்டபம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.