தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க பரிசுத் தொகை அறிவிப்பு! - kerala police announced prize money for terrorist

கன்னியாகுமரி: சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்த குற்றவாளிகளை அடையாளம் காட்டுபவருக்கு கேரள அரசு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் நல்அடக்கம்
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் நல்அடக்கம்

By

Published : Jan 10, 2020, 4:31 PM IST

கன்னியாகுமரி கேரள எல்லைப்பகுதியான படந்தாலுமூடு பகுதியில் காவல் பணியிலிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் நேற்று முன்தினம் இரவு சிலரால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்

இதனையடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழ்நாடு போலீஸ் டிஜிபி திரிபாதி உட்பட பல உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், வில்சனை கொன்றுவிட்டு தப்பி ஓடிய இரண்டுபேரின் உருவங்கள் அருகிலிருந்த மசூதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் (25), நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தவ்பிக் (27) ஆகிய இரண்டு பேர் என காவல் துறையினர் அடையாளம் கண்டனர்.

அப்துல்
தவ்பிக்

இதில் அப்துல் சமீம் மீது, கன்னியாகுமரி மாவட்ட பாஜக மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கு, சென்னை அம்பத்தூரில் சுரேஷ் குமார் என்பவர் கொலை செய்த வழக்கு ஆகியவற்றில் சிறை தண்டனை பெற்றவர். பின்னர், சிறையிலிருந்து பிணையில் வந்து தலைமறைவாக இருந்துவருகிறார்.

அதேபோல் காவல் துறையால் தேடப்படும் தவ்பிக் மீது, முருகன் என்ற பாஜக நிர்வாகியை தாக்கிய வழக்கு, ஏர்வாடியில் பாஜக நிர்வாகி முத்துராமன் என்பவரை வெட்டிய வழக்கு, தக்கலையில் ராமர் கோயிலில் மாட்டு இறைச்சியை வீசி சென்ற வழக்கு உள்பட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரும் பிணையில் வெளியே வந்து பின்னர் தலைமறைவாக வாழ்ந்துவருகிறார்.

மேலும் இந்த இரண்டு பேருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் வந்து சோதனை நடத்தி சென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தியது 7.65 மி.மி ரக கள்ள துப்பாக்கி எனவும் தெரியவந்தது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் நல்அடக்கம்

இதனைத் தொடர்ந்து இருவரின் புகைப்படத்தை வெளியிட்ட குமரி காவல் துறையினர் அவர்களை தேடிவந்தனர். மாவட்டம் முழுவதும் செக் போஸ்ட்கள் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்றுவந்தன.

இந்நிலையில் கேரள மாநில காவல் துறையினரும் இருவரின் புகைப்படத்தை வெளியிட்டு இவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூபாய் ஐந்து லட்சம் பரிசு வழங்கப்படும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் திருவனந்தபுரம் அருகிலுள்ள பூந்துறை என்ற பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் கேரள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்டோரை பிடித்து தனித்தனி இடங்களில் வைத்து காவல் துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...இந்தாண்டு கட்சி தொடக்கம் - நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details