கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமாரி. முக்கூடல் பகுதியில் நடந்து சென்றபோது, இவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கலியை ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர் பறித்துவிட்டு தப்பிச் சென்றார்.
இது தொடர்பாக வசந்தகுமாரி அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துணை ஆய்வாளர் சாமுவேல், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.