தமிழ்நாடு காவல்துறை சார்பில் பெண்கள் ஆபத்து, அவசர காலங்களில் தங்களை தற்காத்துகொள்ளவும், தங்கள் இருக்குமிடத்தை காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் காவலன் என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
காவலன் செயலியை யாரும் விளையாட்டுத்தனமாக பயன்படுத்தக்கூடாது - டிஎஸ்பி பாஸ்கரன் - காவலன் செயலில் டெமோ
கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் தனியார் கல்லூரியில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இச்செயலி குறித்த விளக்கம் தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் அஞ்சுகிராமம் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இந்த செயலியின் செயல் விளக்கமும் விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்ஐக்கள் ஜெஸி மேனகா மற்றும் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய டிஎஸ்பி இதனை விளையாட்டுத்தனமாக யாரும் பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.