தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஷ்மீர் டூ கன்னியாகுமரி:  3,700 கிமீ தூரத்தை 8 நாள்களில் சைக்கிளில் கடந்த இளைஞர்! - cycle rally world record

கன்னியாகுமரி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 3,700 கிலோ மீட்டர் தூரத்தைச் சைக்கிளில் எட்டு நாள்கள் ஒரு மணி நேரத்தில் கடந்து காஷ்மீர் இளைஞர் ஒருவர், சாதனைப் படைத்துள்ளார்.

cycle record
சைக்கிள் ரைடர்

By

Published : Mar 30, 2021, 9:09 PM IST

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆடில் டெலி (24), சைக்கிள் மூலம் நீண்ட தூரப் பயணங்களைச் செய்து பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். அந்த வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சுமார் 3,700 கிலோமீட்டர் தூரத்தைச் சாலை மார்க்கமாக 8 நாள் 1 மணி நேரத்தில் கடந்துள்ளார்.

இந்தச் சைக்கிள் பயணமானது கடந்த மார்ச் 22ஆம் தேதி ஸ்ரீநகரில் தொடங்கி ஜம்மு, பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, பெங்களூரு, சேலம் வழியாக இன்று (மார்ச் 30) கன்னியாகுமரியில் முடிவடைந்தது.

3,700 கிமீ தூரத்தை 8 நாள்களில் சைக்கிளில் கடந்த இளைஞர்

ஏற்கெனவே, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 3700 கிமீ பயணத்தை எட்டு நாள்கள் ஏழு மணி நேரத்தில் கடந்து ஒருவர் சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அவரின் சாதனையை ஆடில் டெலி முறியடித்து கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரி வந்தடைந்த அவருக்கு இலவசமாக உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க:அதை மட்டும் செய்யாதீங்க - தொண்டரின் காலில் விழுந்த மோடி!

ABOUT THE AUTHOR

...view details