தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபாச வீடியோ காசியின் வெளிநாட்டு கூட்டாளி கைது.. குவைத்திலிருந்து திரும்பியதும் பிடித்த போலீசார்... - சிபிசிஐடி போலீசார் கைது

இளம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு மற்றும் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசியின் கூட்டாளி கௌதம் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharatபெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய காசியின்  கூட்டாளி கௌதம் திருவனந்தபுரத்தில் கைது
Etv Bharatபெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய காசியின் கூட்டாளி கௌதம் திருவனந்தபுரத்தில் கைது

By

Published : Oct 17, 2022, 1:25 PM IST

கன்னியாகுமரி:இளம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு மற்றும் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசியின் கூட்டாளி கௌதம் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த வழக்கில் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய அவரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கோழிக்கடை நடத்தி வரும் தங்கபாண்டியன் என்பவரது மகன் காசி. கடந்த 2020 ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் காசி மீது பாலியல் மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காசி கன்னியாகுமரி மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

காதல் வலையில் சிக்கவைத்து மோசடி:பொருளாதார ரீதியில் வசதியுடன் காணப்படும் இளம் பெண்களுடன் நட்பாக பழகி அவர்களை தனது காதல் வலையில் சிக்க வைக்கும் காசி, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பெண்களே தன்னை காதலிக்கும் அளவிற்கு அவர்களை ஏமாற்றி நம்பிக்கையின் அடிப்படையில் அவருடன் நெருங்கி பழகும் பெண்களை வீடியோ பதிவு செய்வதோடு அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதும் இதில் தமிழ்நாடு மற்றும் பெங்களூர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட இளம் பெண்களையும், பள்ளி, கல்லூரி மாணவிகளையும் இது போன்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய காசியின் கூட்டாளி கௌதம் திருவனந்தபுரத்தில் கைது

தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காசியின் கூட்டாளிகளான டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வழக்கு தொடர்பான சாட்சியங்களை கலைப்பதாகவும் ஆதாரங்களை அழித்த காரணத்தாலும் காசியின் தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டிற்கு பின் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் காசியின் மற்றொரு நண்பன் கவுதம் என்பவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு காசியின் அறிவுறுத்தலின் படி பெண்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்கவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். தற்போது குவைத் நாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள்... மூன்று பெண்கள் உடபட 12 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details