மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கருணாநிதியின் நினைவு நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ ஆஸ்டின் - சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின்
கன்னியாகுமரி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி அஞ்சு கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நலத்திட்ட உதவி
இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, கரோனா காலத்தில் சமூக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, முகக்கவசம், கையுறை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.