கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பல முக்கிய விழாக்களில் ஒன்றான மார்கழி மாத தேர் திருவிழாவானது பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழாவானது ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாளான நேற்று தாணுமாலய சுவாமி, கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முன்னதாக சிங்காரி மேளம் ,முத்துக்குடை பவனி, அகல்விளக்கு பவனி , சிவன், பார்வதி, முருகன், கணபதி, ராவணன், கைலாய சிவன், பார்வதி,விஷ்ணு, பிரம்மா, வேடமணிந்த குழந்தைகலும் பக்தர்களும் ஆடிப்பாடி வந்தனர்.