கரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சிறு, குறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டாலும், சில தினசரி கூலி தொழிலாளர்களுக்கு வேலை சரிவர கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மர அரவை தொழில் செய்துவந்த தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாமல் இருக்கின்றனர். மர அறுவை தொழில் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாததால், வேறு வேலைக்குச் செல்ல முடியாமல் கடந்த 70 நாள்களுக்கு மேலாக வருமானமின்றி, தினசரி உணவுக்குக்கூட வழியின்றி தவித்துவருவதாக மர அறுவை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.