தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் கழிப்பறை வசதியின்றி அல்லாடும் சுற்றுலாப் பயணிகள் - நடவடிக்கை எடுக்கப்படுமா? - கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வரும் இந்து அறநிலைய துறை ஊழியர்கள்

கன்னியாகுமரி: கடற்கரையில் உள்ள கட்டண கழிப்பறையில் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தரமான கழிப்பறை அமைத்து தரும்படியும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிப்பறை வசதியில்லா கன்னியாகுமரி

By

Published : Oct 15, 2019, 8:58 PM IST

குமரியில் கழிப்பறை வசதியின்றி அல்லாடும் சுற்றுலாப் பயணிகள்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் சூரியன் உதயம் மறையும் நிகழ்வுகளை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. இருப்பினும் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகைளையும் இதுவரை செய்யவில்லை.

கன்னியாகுமரியில் கழிப்பறை வசதியில்லாமல் அல்லாடும் சுற்றுலாப் பயணிகள்

குறிப்பாக சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை தேவைகளான கழிப்பறை, குளியலறை, உடை மாற்றும் அறை போன்ற இடங்களில் உரிய வசதிகள் எதுவுமில்லை. மேலும் இந்து சமய அறநிலைதுறைக்குச் சொந்தமான கடற்கரை பகுதியில் செயல்பட்டுவரும் கட்டணக் கழிப்பறை குப்பைகளால் சூழ்ந்து சுகாதாரமற்ற நிலையிலும் கட்டிடம் பாழடைந்து இடிந்து விழும் நிலையிலும் உள்ளது.

இந்த கட்டணக் கழிப்பறையை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் கட்டாய நிலை இருப்பதால் இந்து சமய அறநிலைத் துறை ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் கழிப்பிடம் செல்ல ரூ. 10, குளிப்பதற்கு ரூ. 30, உடை மாற்றுவதற்க்கு ரூ. 20 என கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வேதனை அடைவதோடு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தீர்த்து வைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வரும் இந்து அறநிலைய துறை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க:

'ஒழிந்தான் மகிஷாசூரன்; இனி ஓய்வெடுப்பார் மகாகாளி!'- தோவாளையில் நடந்த முத்தாரம்மனின் வதம்!

ABOUT THE AUTHOR

...view details