கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் சத்தான உணவு பொருள்களை உட்கொள்ளவேம்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், மக்கள் பலர் ஊரடங்கினால் வேலையிழந்து அன்றாட தேவைகளுக்கே அரசை எதிர்பார்ததுவரும் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு கொண்டை கடலை, கோதுமை மாவு, பயறு வகைகள் உள்பட 15 வகையான உணவு பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கியுள்ளனர்.