கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சங்குதுறை பீச் செல்லும் சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. கடந்த வியாழக்கிழமை (பிப். 27) பணியாளர்கள் பணிமுடிந்து கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.
நேற்று முன்தினம் காலை பணியாளர்கள் வழக்கம்போல பணிக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே புகுந்து ஐந்சு பெட்டிகளிலிருந்த உயர் ரக மதுபானங்களை எடுத்துச் சென்றதோடு, உணவுப்பொருள்கள், சிகரெட் பாக்கெட், பணம் போன்ற சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.