தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியும் ஒன்று.
இங்கு வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 21) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், குறைந்தளவு பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அரசின் வழிகாட்டுதலின் படி தகுந்த இடைவெளிவிட்டு முகக்கவசம் அணிந்து கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று (ஆக. 21) அதிகாலை முத்திரிபதமிட்டு திருநடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும், கொடிப் பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும் அதன்பின்னர் திருக்கொடியேற்றமும் நடைபெற்றது.