தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேர் திருவிழா! - kanyakumari suchindram temple fuction

கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி மாத தேர் திருவிழாவில் பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

தேர் திருவிழா
தேர் திருவிழா

By

Published : Jan 9, 2020, 12:57 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் மார்கழி மாத தேர் பெருந்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான மார்கழி மாத தேர் பெருந்திருவிழா ஜனவரி 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள், மக்கள் மார் சந்திப்பு, சுவாமி வீதி உலா, கருடாழ்வார் தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 9ஆவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெறுவதற்கு முன்பு, கோயிலில் இருந்து பல்லாக்கில் சுவாமி ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய காவலர் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேர் திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். இந்த திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடும் கொலையாளிகள்: சிசிடிவி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details