கன்னியாகுமரி:கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரி சார்பில் மனநலம் - சிறப்பான வாழ்க்கை முறை குறித்து இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கு இணைய வழியாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். பாரதியார் பல்கலைக்கழக உளவியல் துறை தலைவர் அன்னலெட்சுமி, சஞ்சு, பிரபாகரன் ஆகியோர் இம்மாநாட்டின் நடுவர்களாகப் பங்கேற்றனர்.
பிசிஓடி குறித்த ஆய்வுக்குப் பரிசு
40 மாணவர்கள் தாங்கள் குழுவாக மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை மாநாட்டில் சமர்ப்பித்தனர். இதில், கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவி நூருல் ஷப்ஃரான் தலைமையில் மாணவிகள் அக்ஷயா, தனிஷ்கா ஆகியோர் கூட்டாக மேற்கொண்ட ஆய்வின் முடிவினை நூருல் ஷப்ஃரான் சமர்ப்பித்தார்.
'பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி (Polycystic Ovarian Disease) பிரச்சினை, அதனால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள்' என்ற தலைப்பில் அவர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் நூருல் ஷப்ஃரான் ஆய்வு கட்டுரை சிறந்ததாகத் தேர்வுசெய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பயமா.. எனக்கா.. 100 அடி கிணற்றில் டைவ் அடிக்கும் 85 வயது மூதாட்டி