கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பழைய பாலம் பகுதியிலுள்ள தேவிகுமாரி மகளிர் கல்லூரி சாலையில் கடந்த 11ஆம் தேதி கல்லூரி முடிந்து மாணவிகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது குழித்துறை செல்ல வேண்டிய சிற்றுந்து, தடம்மாறி கல்லூரி சாலையில் அதிவேகமாகச் சென்றது.
தாறுமாறாக ஓடிய சிற்றுந்து, சாலையோரமாகச் சென்றுகொண்டிருந்த மாணவிகள் மீதும் அங்கிருந்த வாகனங்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11 மாணவிகள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவிகள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சுஜித்திரா என்ற மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.