தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகளின்றி தவிக்கும் வியாபாரிகள்! - கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்

கன்னியாகுமரி: கடல் சீற்றத்தால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி

By

Published : Aug 28, 2019, 4:04 PM IST

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமமும், உலகில் எங்கும் காண முடியாத சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை காணலாம்.

கடல் சீற்றத்துடன் காணப்படும் கன்னியாகுமரி.

தற்போது கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே காணப்படுகிறது.

இந்நிலையில். கன்னியாகுமரியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கடல் சங்கமம் பகுதி, கடற்கரை சாலை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details