ஜனவரி மாதம், புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பால், ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
ஜனவரியில் கட்சி...குதூகலத்தில் குமரி ரஜினி ரசிகர்கள்! - rajini poltical entry
கன்னியாகுமரி : நடிகர் ரஜினி தான் ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, நாகர்கோவிலில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
![ஜனவரியில் கட்சி...குதூகலத்தில் குமரி ரஜினி ரசிகர்கள்! ரஜினி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9751247-thumbnail-3x2-fasfa.jpg)
ரஜினி
ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலர் சங்கர் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற ரஜினி ரசிகர்கள், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.