தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குமரி தள்ளுவண்டி வியாபாரிகள்!

கன்னியாகுமரி: கரோனா அச்சம் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், மூன்று மாதத்திற்கு மேல் வியாபாரம் இல்லாததால் தள்ளுவண்டி வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

Push cart salesman affected  குமரி மாவட்டச் செய்திகள்  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள்  kumari district news  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குமரி தள்ளுவண்டி வியாபாரிகள்  தள்ளுவண்டி
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குமரி தள்ளுவண்டி வியாபாரிகள்

By

Published : Aug 14, 2020, 10:10 PM IST

இந்தியாவின் தென்கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமரி பகுதிக்கு ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். சிறு வியாபாரிகள் முதல் பெரு வியாபாரிகள் வரை இந்த சுற்றுலாப் பயணிகளை நம்பியே தொழில் செய்து வருகின்றனர். சுமார் 160 தள்ளுவண்டிக்கடைகளில், கைவினைப் பொருள்கள், பழங்கள், துணி, டீ போன்றவற்றை வைத்து வியாபரிகள் தொழில் செய்துவருகின்றனர்.

மார்ச் மாதம் முதல் ஜூன் வரையிலான சீசன் காலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்துவந்த வியாபாரிகளின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து தள்ளுவண்டியில் பேன்சி பொருள் வியாபாரம் செய்யும் ஆறுமுகம் பேசுகையில், கரோனா ஊரடங்கால் வியாபாரம் சுத்தமாக இல்லை.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குமரி தள்ளுவண்டி வியாபாரிகள்

ஒரு லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற்று பொருள்களை வாங்கி வைத்திருந்தேன். கரோனா ஊரடங்கு வாழ்கையில் விளையாடிவிட்டது. வேறு எந்த தொழிலும் எங்களுக்கு தெரியாது. இதனால், குடும்பத்துடன் வறுமையில் தவித்து வருகிறேன். மத்திய, மாநில அரசுகள் எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு உதவ முன்வரவேண்டும்" என்றார்.

தள்ளுவண்டியில் துணிக்கடை வைத்திருக்கும் பீட்டர் பேசுகையில், மூன்று மாதத்திற்கு மேலாக தள்ளுவண்டியைப் பயன்படுத்தால், தள்ளுவண்டி துருப்பிடித்து பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளதாகவும் அரசு தங்களுக்கு உதவ முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரப்பர் தோட்டத்தை அழிக்க முயற்சி - காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details