தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 25, 2023, 2:05 PM IST

ETV Bharat / state

62 வயதில் இந்தோனேசிய பெண்ணுடன் மதபோகருக்கு காதல்.. உறவினர்கள் வீட்டை பூட்டை சிறை வைத்ததால் பரபரப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 62 வயதான மதபோதகருடன் இல்லற வாழ்வில் இருந்த இந்தோனேசிய இளம்பெண்ணை, அவரது உறவினர்கள் வீட்டு சிறையில் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

62 வயதில் இந்தோனேசிய இளம்பெண்ணுடன் மதபோதகர் காதல்.. உறவினர்கள் சிறைபிடிப்பு!
62 வயதில் இந்தோனேசிய இளம்பெண்ணுடன் மதபோதகர் காதல்.. உறவினர்கள் சிறைபிடிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 62 வயதான மதபோதகருடன் இல்லற வாழ்வில் இருந்த இந்தோனேசிய இளம்பெண்ணை, அவரது உறவினர்கள் வீட்டு சிறையில் வைத்தனர்

கன்னியாகுமரி: குளச்சல் அருகே உள்ள பருத்தி விளையைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (62). இவர் திருமணம் ஆகாத நிலையில் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, அவரது தாயார் உயிரிழந்தார். இந்த நிலையில் கிறிஸ்டோபருக்கு, முகநூல் மூலம் இந்தோனேசியாவைச் சேர்ந்த திபோரா என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முகநூல் வழியாக திபோரா உடன் அடிக்கடி மத போதனையில் ஈடுபட்டு வந்த கிறிஸ்டோபர், ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண்ணைக் காதலிக்கத் தொடங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 21ஆம் தேதி திபோராவை நாகர்கோவில் அழைத்து வந்துள்ளார், கிறிஸ்டோபர். பின்னர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்த கிறிஸ்டோபர், அப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதற்கு அவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனிடையே நேற்று (ஜன.24) இரவு கிறிஸ்டோபர், உணவு வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரது உறவினர்கள், திபோராவை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்துள்ளனர்.

மேலும் வெளியே சென்ற கிறிஸ்டோபர் வீட்டிற்கு உள்ளே வர முடியாத அளவில், கதவுகளை பூட்டியதோடு மட்டுமல்லாமல் முன்பக்க கேட்டையும் மூடியுள்ளனர். பின்னர் வீடு திரும்பிய கிறிஸ்டோபர் நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து காவல் துறைக்கு அவர் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கிறிஸ்டோபரின் சகோதரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இரு தரப்பினருடன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என காவல் துறையினர் எச்சரித்தனர்.

இதனையடுத்து கிறிஸ்டோபரின் சகோதரர்கள் கேட்டை திறந்து, காவல் துறையினரின் விசாரணைக்குச் சம்மதித்தனர். எனவே கிறிஸ்டோபரைக் காவல் துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இரு தரப்பினரும் குளச்சல் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வர வேண்டும் என கூறி, பாதுகாப்பிற்காக சில போலீசாரை அங்கு நிறுத்தினர்.

இதையும் படிங்க:அழகுகலை நிபுணர் போட்டோவை மார்ப்பிங்.. இன்ஸ்டா பெண்கள் உஷார்.. இளைஞர் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details