இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு அன்று நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை - threat
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதையடுத்து, கன்னியாகுமரி ரயில்நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா காவல்துறை கட்டுப்பாடு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பயங்கரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். பின்னர் இந்த தகவல் பொய் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி ரயில்நிலையத்திலும் தற்போது காவல் துறையினர், வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.