புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்துசெல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலையில் ஞாயிறு எழுதலை (சூரிய உதயம்) பார்ப்பது, பின்னர் கடற்கரை சாலையிலுள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சீசன் காலங்களில் கடற்கரைச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதன்காரணமாக சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுவந்தது. கடற்கரையையொட்டி காமராஜர் மணிமண்டபம்முதல் காட்சிகோபுரம்வரை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு இருந்தது.