தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தில் இறக்கி விடப்பட்ட நரிக்குறவர் தம்பதி ; அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து - நரிக்குறவர் பிரச்சினை

நாகர்கோவில் நரிக்குறவர் தம்பதியை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நரிக்குறவர் தம்பதி விவகாரம்
நரிக்குறவர் தம்பதி விவகாரம்

By

Published : Dec 13, 2021, 10:12 AM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த தம்பதியினரை, அரசு பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கிவிட்டது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.இதுதொடர்பாக சமூகவலைதள வாசிகள் பல்வேறு வகையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

பணியிடை நீக்கம்

இதையடுத்து அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தியதாக கூறி சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் நெல்சன், நடத்துனர் ஜெயதாஸ் மற்றும் மேலாளர் அனீஸ் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அரவிந்த் உத்தரவிட்டார்.

குடிபோதையில் தகராறு

மேலும், இது குறித்து உயர் அலுவலர்கள் செய்த விசாரணையில் நடத்துநர் மீது எந்த தவறும் இல்லை என்பதும், சம்பந்தப்பட்ட நரிக்குறவர் தம்பதியர் இருவருமே அதிகளவில் மது அருந்திவிட்டு பேருந்தில் தகராறு செய்ததாகவும். அதனால், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதால் தான் அவர்கள் கீழே இறக்கி விட நேர்ந்ததும் தெரியவந்தது.

அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து

இதையடுத்து, தற்போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மற்றும் மேலாளர் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்து பொது மேலாளர் அரவிந்த உத்தரவிட்டுள்ளார்.

பொது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி பலவற்றை அரசுக்கு சுட்டிக்காட்டுவதில் சமூக வலைதளங்களுக்கு அதிக பங்கு இருந்தாலும் கூட இதுபோன்ற விவகாரங்களில் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யாமல் பகிரப்படும் வீடியோவால், தவறு செய்யாதவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணமாக இச்சம்பவம் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: அரசுப்பேருந்து - தொழிற்சாலை பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்

ABOUT THE AUTHOR

...view details