தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசு பட்ஜெட் துண்டு விழுந்த பட்ஜெட் - வசந்தகுமார் எம்பி தாக்கு - இஸ்லாமியர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது

கன்னியாகுமரி: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் துண்டு விழுந்த பட்ஜெட் என்றும், அதில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் வசந்தகுமார் எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

vasanthakumar mp
vasanthakumar mp

By

Published : Feb 16, 2020, 11:45 AM IST

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் துண்டு விழுந்த பட்ஜெட், தமிழ்நாட்டிற்கு எந்த வளர்ச்சித் திட்டங்களும் இல்லை.

மாமல்லபுரத்திற்கு சீன அதிபரும் பிரதமரும் வந்த காரணத்திற்காக பணம் ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால், பாரம்பரியமிக்க கன்னியாகுமரியில் சுற்றுலாத் திட்டங்களை நிறைவேற்ற பணம் ஒதுக்கீடு செய்யாதது மிகவும் வேதனைக்குரியது. சட்டத்திற்குட்பட்டு ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார் எம்பி

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியை கூட மத்திய அரசிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுப் பெறவில்லை. அவர்களுக்கு இடையே உள்ள நட்பு காரணமாக இந்தத் தொகையை கேட்டு பெறாததால் தமிழ்நாடு மக்கள்தான் மிகவும் பாதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் திருட்டு - வெளியான சிசிடிவி வீடியோ!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details