தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 2, 2021, 1:13 PM IST

Updated : Jun 2, 2021, 1:25 PM IST

ETV Bharat / state

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து

கன்னியாகுமரி : பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் கோயிலின் கூரைகள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன.

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து
கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து

கன்னியகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவைச் சேர்ந்த பெண் பக்தர்களும் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் காரணமாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் இன்று (ஜூன் 2) காலை ஆறு முப்பது மணிக்கு, வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு அர்ச்சகர்கள் கருவறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென கருவறையின் கூரையின் மேல் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தக்கலை, குளச்சல் பகுதி தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதி பொதுமக்களும் அங்கு திரண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீபாராதனை முடித்து வைக்கப்பட்டிருந்த தீபத்திலிருந்து கருவறையில் தீப்பற்றி இருக்கலாம் என்ற கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் இல்லாத்தால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கருணாநிதியின் பிறந்தநாளிலாவது அர்ச்சகர் கனவு நிறைவேறாதா?

Last Updated : Jun 2, 2021, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details