கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த வசந்தகுமார், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி ஆகஸ்ட் 28ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! - கன்னியாகுமரி மக்களவை தொகுதி
டெல்லி: கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! வாக்குப்பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10792602-34-10792602-1614354303887.jpg)
தமிழ்நாட்டை போலவே கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மே-ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ளது. அதற்கான தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த குன்ஹாலிக்குட்டி, தனது மலப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அதற்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.