கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு கடந்த சில நாட்களாக தரமற்ற உணவு, தரமற்ற மருந்து போன்றவை வழங்கப்படுவதாகவும் ஏற்கனவே, ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெந்நீர்தான் குடிக்க வேண்டும் என தெரிந்தும், வெந்நீர் வழங்குவதில்லை என கரோனா நோயாளிகள் குற்றஞ்சாட்டிள்ளனர்.
மேலும், இருமல் போன்ற பாதிப்பு குறித்து மருத்துவர்களிடம் சொல்ல முடியவில்லை. தங்கள் குறைகளை கேட்க மருத்துவர்கள் வருவதில்லை எனவும் அவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். மேலும், அறைகளில் பிளீச்சிங் பவுடர் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
’எங்களுக்கு கரோனா இல்லை... ஆயுள் கைதி மாறி நடத்துறாங்க’ - தக்கலை மருத்துவமனை
நாகர்கோவில்: தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நோயாளிகள், தங்கள் குறைகளை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
ladies