குமரி மாவட்டம் நாகர்கோவிலில் பணியிலிருந்த ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேர், அவரது வீட்டின் கீழ்ப் பகுதியில் வசித்த இரண்டு பேர் உள்ளிட்ட ஏழு பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆய்வாளர் அடிக்கடி வந்து சென்ற கோட்டார் காவல் நிலையத்திற்குத் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய காவலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர். காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பிறகு மீண்டும் காவல் நிலையம் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளருக்கு கரோனா; கோட்டார் காவல் நிலையம் மூடல்! - தமிழ்நாடு கரோனா
நாகர்கோயில்: காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவர் பணிபுரிந்த கோட்டார் காவல் நிலையத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோட்டார் காவல் நிலையம் மூடல்