கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கந்தசஷ்டி விழா நடத்த அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் பாரம்பரிய முறைப்படி கந்தசஷ்டி விழா நடத்த அனுமதிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் இந்து அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா காலம் என்பதால் கந்தசஷ்டி விழாவில் சுவாமி, சூரன் ஆயக்கால் சுமப்பவர், பூசாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி கிடையாது. பொதுமக்கள் விழாவினை தங்கள் இல்லங்களிலிருந்து காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.