கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஹைதராபாத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பு என இன்னபிற காரணங்களுக்காக ஏராளமானவர்கள் பயணம் செய்கின்றனர். எனினும் கன்னியாகுமரியிலிருந்து ஹைதராபாத்துக்கு நேரடியாக ரயில் எதுவும் இல்லை.
குமரி - ஹைதராபாத் இடையே நேரடி ரயில் வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
கன்னியாகுமரி: இணைப்பு ரயிலுக்காக பல மணிநேரம் காத்திருக்கவேண்டிய நிலை உள்ளதால், குமரியிலிருந்து ஹைதராபாத்துக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இங்கிருந்து சென்னை சென்று பின்னர், ஹைதராபாத் செல்வதற்காகச் சென்னை ரயல் நிலையத்தில், பல மணி நேரம் காத்திருந்து பயணிக்கும் அவலநிலை நிலவுகிறது.
எனவே கன்னியாகுமரியிலிருந்து ஹைதராபாத்துக்கு நேரடியாகத் ரயில் இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. அப்படி இல்லாத பட்சத்தில் சென்னையிலிருந்து தினசரி மூன்று ரயில் ஹைதராபாத்துக்கு இயக்கப்படுகிறது. இதில் ஏதாவது ஒரு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.