தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் எதிரொலியாக குமரி மாவட்டத்தின், மேற்கு கடல் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது.
கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் மீனவ மக்கள் பீதி! - கடல்நீர்
நாகர்கோவில்: மேற்கு கடலோரப் பகுதிகளில் இன்று காலை ராட்சத அலைகள் ஏற்பட்டு, கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் மீனவ கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் மீனவ மக்கள் பீதி
இதனால், மேற்கு கடலோரப் பகுதிகளில் ராட்சத அலைகள் ஏற்பட்டு தூண்டில் வளைவு மற்றும் கடல் அரிப்புச் சுவரைத் தாண்டி கடல்நீர் ஊருக்குள்ள புகுந்துவருகிறது. இதனால், அப்பகுதிகளில் வாழும் நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, அழிக்கால், வள்ளவிளை போன்ற மீனவ கிராமங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் வீடுகளில் மணல் தடுப்புகளை ஏற்படுத்தி தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடு செய்துவிட்டு மீனவ மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.