தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரள விசைப் படகுகள் குமரி துறைமுகத்தில் நுழைய தடைக்கோரி மீனவர்கள் மனு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் கேரள விசைப்படகுகள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் மனு அளித்தனர்.

fishermen
fishermen

By

Published : Aug 11, 2020, 6:46 PM IST

இது தொடர்பாக, குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் பகுதி மீனவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், 'தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள மீன்குஞ்சுகள், சிறு கிளாத்தி உட்பட மீன்கள் இறக்க தடை விதிக்க வேண்டும். போலி பத்திரப்பதிவு செய்து தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தியிருக்கும் விசைப்படகுகளை வெளியேற்ற வேண்டும்.
தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலுள்ள மீன் விற்பனைக்கூடத்தை மேசை நாற்காலிகள் போட்டு மீன் வியாபாரிகள் அடைத்துள்ளனர். இதன் காரணமாக, மீன் விற்பனைக் கூடத்தில் மீன்களை விற்க முடியாமல் துறைமுகத்தின் நடைபாதையில் விற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் அலை தடுப்புச்சுவர் இரண்டு பக்கத்திலும் 200 மீட்டர் தூரத்திற்கு கட்ட வேண்டும். கடல் சீற்றத்தால் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு தலா 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் ' என, அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கடல் அட்டை சேகரிப்பு: மூச்சுத் திணறி உயிரிழந்த மீனவர்

ABOUT THE AUTHOR

...view details