தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி விவசாயிகள் சூழிலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க எதிர்ப்பு! - கன்னியாகுமரி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சூழிலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க விவசாயிகள் குறைக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஒட்டுமொத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குமரி விவசாயிகள்

By

Published : Sep 26, 2019, 11:05 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைக்கேட்பு கூட்டம் நடந்தது. உதவி ஆட்சியர் ராகுல் நாத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குமரி விவசாயிகள் சூழிலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க எதிர்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க 12 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது அமைந்தால் நிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும், சாதாரண விவசாயி தனது நிலத்தில் ஒரு கிணறு தோண்டுவதற்கு கூட வனத்துறையின் அனுமதியை எதிர்நோக்க வேண்டும், எனவே எந்த காரணம் கொண்டும் இது அமைக்க கூடாது என ஒட்டு மொத்த விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் படிக்க: கீழ்பாக்கம் காவல்துணை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி ஆஜர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details