கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (19). இவர் நாகர்கோவிலில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (ஜூலை 28) தனது சட்டையை அயன் செய்ய அயன்பாக்ஸில் மின்சார இணைப்பை செலுத்தினார். பின்னர் மின் ஒயர்களை தன் கையில் சுழற்றி கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி அலறினார்.
கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி பொறியியல் மாணவர் உயிரிழப்பு - கன்னியாகுமரி மாணவர் பலி
கன்னியாகுமரி: தக்கலை அருகே மின்சாரம் தாக்கி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kanyakumari Engineering student killed in electrocution
இதையடுத்து அவரை மீட்ட பெற்றோர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு விஷ்ணுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தக்கலை காவல்துறையினர், விஷ்ணுவின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.