குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும் கடை வரம்பு பகுதிகளான அத்திக்கடை, சம்பகுளம் மற்றும் தெங்கம்புதூர் கால்வாய்களில் இதுவரையிலும் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால் அப்பகுதிகளில் விவசாய பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் கால்வாய்களில் தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதூர் சந்திப்பில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது நீர்வள ஆதார அமைப்பு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் இதுவரையிலும் கால்வாய் தூர்வாரப்பட்டு, தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பதால் தண்ணீரின்றி பாதிக்கப்படும் நெற்பயிர்களை, இதர பயிர்களையும் காப்பாற்ற உடனடியாக கால்வாயை தூர்வாரி தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி நாகர்கோவிலில் நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆஸ்டின் தலைமையில் ஏராளமான திமுகவினர் இன்று போராட்டம் நடத்தினர். அதில் திமுகவினர் கோஷங்களை எழுப்பியதால், நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரி திமுகவினர் போராட்டம்! இதையும் படியுங்க:பெண் வயிற்றில் கட்டியா, கர்ப்பமா என்பது கூட தெரியாத மருத்துவர்கள்