கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை, வாழையத்துவயல், புதுக்குளம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்கள் வீடுகளில் மராமத்து பணிகளை மேற்கொள்வதற்காக கட்டுமான பொருள்களை கொண்டு செல்வதை வனத்துறையினர் தடை செய்துவருகின்றனர்.
மராமத்து பணிகளை தடைசெய்யும் வனத்துறை: மலைவாழ் மக்கள் போராட்டம்
கன்னியாகுமரி: தங்கள் வீடுகளில் மராமத்து பணிகளை மேற்கொள்வதற்காக கட்டுமான பொருள்களை கொண்டு செல்வதை வனத்துறையினர் தடை செய்து வருவதையடுத்து மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இது போன்ற தடைகள் நீடித்து வருவதால் மலைவாழ் மக்கள் பழுதடைந்த தங்கள் வீடுகளை இன்னும் சீர் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனையடுத்து நேற்று (ஜூலை 2) இரவு முழுவதும் தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி முன்பு ஏழு கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் சாலை நடுவே கஞ்சி காய்ச்சும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். நேற்று ( ஜூலை 2) மாலை ஆரம்பித்த போராட்டமானது நள்ளிரவுவரை தொடர்ந்தது தொடர்ந்து, இன்றும் (ஜூலை 3) நடைபெற்று வருகிறது. இந்த தடையை விலக்கிக் கொள்ளாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.