தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்’ - ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி

கன்னியாகுமரி: கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் முறை கட்டாயம் எனவும், கரோனா பரிசோதனை செய்த பிறகே பயணிகள் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

collector
collector

By

Published : Apr 14, 2021, 6:15 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டடத்தில் கரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை விரைந்து தயார் செய்து வருகிறோம்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 300 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 130 நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தவிர ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி போன்றவற்றில் தற்காலிக சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

மாவட்டம் முழுவதும் இதற்காக நான்கு செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி எல்லையில் செக்போஸ்ட் அமைத்து கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு சோதனை செய்து வருகிறோம். கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு சளி, காய்ச்சல் பரிசோதனை செய்த பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதுவரை மாவட்டம் முழுவதும் 67 ஆயிரம் பேருக்கு முதற்கட்ட கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுதவிர தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details