கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தோவாளையில் ஒன்றரை வயது, மூன்று வயதுடைய இரு ஆண் குழந்தைகள் உட்பட மாவட்டம் முழுவது ஒன்பது குழந்தைகள், ஐந்து கர்ப்பிணி பெண்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டு உள்ளனர்.
ஒரே நாளில் 198 பேர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.