கன்னியாகுமரிமாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், ஏழை மக்கள் மருத்துவ வசதி பெற மகளிர் காங்கிரஸ் சார்பில் பதிவு மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் இன்று தொடங்கியது.
ஏழை எளிய மக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை, இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ் மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மூலம் பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தில் கூரை வீடு இல்லாதவர்கள், பழங்குடி மக்கள், ஊனமுற்றவர்கள், நிலம் அற்றவர்கள், கூலி வேலை செய்பவர்கள் போன்றவர்கள் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்; இந்தத் திட்டத்தில் விபத்து மற்றும் 21 வகையான அவசரகால சிகிச்சைகளுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:Rahul Gandhi: ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு மீதான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
இந்த அட்டையைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறலாம் எனவும்; மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்தியாவில் பொது மக்கள் நோயினால் கஷ்டப்படும் காலத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் பலர் கஷ்டப்படும் சூழ்நிலை நிலவுகிறது. சிகிச்சைக்காக கடன் வாங்கும் சூழ்நிலையும் நிலவுகிறது. அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியுள்ள நபர்கள் இந்தக் கடன் அட்டைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.