தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்...

கன்னியாகுமரி: பொது ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வந்தாலோ, ஒன்றாக கூடினாலோ அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு எச்சரிக்கை
மக்களுக்கு எச்சரிக்கை

By

Published : Mar 25, 2020, 9:44 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் எப்படி இருக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. எனினும் நமது அருகாமையில் உள்ள கேரளாவில் அதிகம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்...

தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி இன்று மாலை ஆறு மணி முதல் வரும் 31ஆம் தேதிவரை பொது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நாட்களில் பொதுமக்கள் யாரும் அநாவசியமாக வெளியே வரவேண்டாம். வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இந்திய பிரதமர் உத்தரவுப்படி கடந்த 22ஆம் தேதி நடந்த ஜனதா குரூபியூ அன்று நான் பல இடங்களுக்கு சென்று பார்த்தேன். அப்பொழுது அரசு ஏதோ ஒருநாள் விடுமுறை விட்டுள்ளார்கள், அந்த நாளை கொண்டாடலாம் என்ற எண்ணத்தில் பலர் கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் சுற்றுலா செல்வதை காண முடிந்தது.

இது மிகவும் தவறானதாகும். இதுபோன்று வரும் நாட்களில் நடைபெறவுள்ள பொது ஊரடங்கு நாட்களில் விடுமுறை என்று நினைத்து யாராவது பொது இடங்களில் கூடினாலோ அல்லது சுற்றுலா சென்றாலோ அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறேன்.

கரோனா வைரஸ் நோய் உங்களுக்கு இருப்பது உங்களுக்கே தெரியாது. உங்களிடமிருந்து மற்றவருக்கு மிக எளிதாக பரவிவிடும். எனவே இந்த பொது ஊரடங்கு நாட்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள் மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்க விடுங்கள்.
இவ்வாறு அவர் அந்த காணொளி காட்சியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்' - பிரதமரின் முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details