கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 10ஆம் தேதி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். அன்றைய தினம் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வருகிறார். அங்கு பிற்பகல் 3 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்பு, அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சரின் வருகைக்கு தயாராகும் கன்னியாகுமரி மாவட்டம் - நாகர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி
கன்னியாகுமரி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 10ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

முதலமைச்சரின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் ஆய்வு
அவரது வருகையை அடுத்து, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை ஆட்சியர் அரவிந்த், காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மற்றும் அலுவலர்கள் இன்று (நவம்பர் 4) நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள், முதலமைச்சர் வரும் பகுதி, விழா நடைபெறும் இடம், ஆய்வுக் கூட்டம் நடைபெறும் அரங்கு ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: ரூ. 294 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்!