கன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக செல்வதற்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. குறிப்பாக, இறப்பு, நெருங்கிய உறவினர் திருமணம், அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு இந்த அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.
இவ்வாறு வெளியூர் செல்வதற்கான அனுமதி பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்ப மனுக்களையும், எதற்காக செல்கிறோம் என்பது தொடர்பான ஆவணங்களையும் கொடுக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கோரிக்கை நியாயமானது என்று தெரிந்தால், வெளியூர் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.