இதுகுறித்து அவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் இதுவரை கரோனா நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. எனினும் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற நோக்கில் குமரியில் 3 வழிகளில் எல்லை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாலை வழியில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் - தமிழ்நாடு கரோனா
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 1077 என்ற எண் கொண்ட கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு, 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி சந்தேகம் மற்றும் அச்சத்தை போக்கலாம். அதிகாரிகள் தலைமையில் மண்டல அளவிலான குழு உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள 1400 அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள்,திரையரங்குகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நோய் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வகையில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா பரவுவதை தடுக்க மருந்து கடைகளில் காய்ச்சல் தொடர்பாக யார் மருந்து வாங்க வந்தாலும் அவர்கள் குறித்த தகவல்களை உடனே சுகாதார துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மருந்து கடைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த நோய் வேகமாக பரவக்கூடியது என்பதால் மக்கள் ஒத்துழைக்கவேண்டும். தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்கவும். அரசு கூறிய காலகட்டம் வரை கண்டிப்பாக மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.