தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகளுக்கு விடுமுறை - வானிலை

கன்னியாகுமரியில், கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

school leave  kanniyakumari school leave  school leave due to rain  heavy rain  rain  weather report  flood  kanniyakumari news  kanniyakumari latest news  kanniyakumari collector  collector  கன்னியாகுமரி செய்திகள்  கன்னியாகுமரி மழை  கன்னியாகுமரியில் கனமழை  கனமழை  மழை  வானிலை  கன்னியாகுமரியில் வெள்ளம்
school leave

By

Published : Oct 18, 2021, 6:58 AM IST

கன்னியாகுமரி: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை கொட்டித்தீர்த்தது.

கடந்த இரண்டு நாள்களாக கன்னியாகுமரில் கனமழை பெய்ததால், முக்கியச் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் சிற்றாறு, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

அணைகளில் நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே போவதால், விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 18) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எம். அரவிந்த் நேற்று (அக்டோபர் 17) உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நிலச்சரிவில் சிக்கிய பயணிகளின் உயிரைக் காத்த அரசுப் பேருந்து ஊழியர்!

ABOUT THE AUTHOR

...view details