கன்னியாகுமரியில் இருந்து வேலை வாய்ப்பு, மருத்துவம், உயர் கல்வி போன்ற பல்வேறு தேவைகளுக்காக ஏராளமானவர்கள் சென்னையில் தங்கியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் சென்னை சென்று வர ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். பேருந்துகளில் கட்டணம் அதிகம் இருப்பதாலும், சாலை போக்குவரத்து பாதுகாப்பு இல்லை என்பதாலும் குமரி மக்களின் முதல் தேர்வாக ரயில்கள் இருந்து வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில்கள் என்று பார்த்தால் 3 இரவு நேர ரயில்களும், ஒரு பகல் நேர ரயிலும் இயக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் வாரம் மூன்று முறை, வாரம் ஒரு முறை என சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாகர்கோவில் தாம்பரம் வரை செல்லும் ரயில் மாலை 5 மணிக்கும், இரண்டாவதாக கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் தினசரி ரயில் மாலை 5.40 மணிக்கும், மூன்றாவதாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6 மணிக்கும் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றுவிடுகிறது. அதன்படி 5 மணி முதல் 6 மணி வரை உள்ள ஒரு மணி நேர இடைவெளியில் மட்டும் மூன்று ரயில்களும் புறப்பட்டுச் சென்றுவிடுகிறது.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை புறப்படும் ரயில் நேரத்தை மாற்ற கோரிக்கை! - ரயில்கள்
கன்னியாகுமரி: குமரியில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் அடுத்தடுத்து ஒரு மணி நேரத்தில் சென்று விடுவதால் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் அல்லது ரயில் கால அட்டவணையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை புறப்படும் ரயில் நேரத்தை மாற்ற கோரிக்கை
இவ்வாறு ஒரு மணி நேரத்திற்குள் இந்த ரயில்கள் செல்வதால் சில பயணிகள் காலதாமதமாக சென்னைக்கு செல்லவோ, அல்லது அதிகாலை சென்னை செல்ல ரயில் வசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த ரயில் கால அட்டவணையை மாற்றி ஒரு மணி நேர இடைவெளி விட்டு புறப்பட்டும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் அல்லது கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று ரயில் பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.