தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு, அதிமுக சார்பாக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் நேற்று (மார்ச் 15) பூதப்பாண்டியில் அமைந்துள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட விநியோக அலுவலர் சொர்ண ராஜுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,'அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிப்போம். குமரி மாவட்டத்தில் மீனவர்களைப் பாதிக்கும் துறைமுகம் அமைய தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். அதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்படமாட்டாது' என்றார்.
'குமரியில் துறைமுகம் கொண்டு வந்தே தீருவோம்' - முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்! - Kanyakumari Port
குமரி: குமரியில் புதிய துறைமுகம் அமைய தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார் என தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறிவந்த நிலையில், குமரி மக்களவைத் தொகுதிக்கு பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் புதிய துறைமுகம் அமைவது உறுதி எனத் தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக - பாஜகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
இதனிடையே குமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருக்கும் மக்களவைக்கான பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், 'குமரியில் துறைமுகம் கொண்டு வந்தே தீருவோம்' என உறுதிபட செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாஜக கூட்டணி கட்சியின் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம், 'சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் வராது' எனக் கூறியும், குமரியில் துறைமுகம் கொண்டு வந்தே தீருவோம்' பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதும் கூட்டணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.