கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன் குடியிருப்பைச் சேர்ந்த சுதர்சன் நேற்று (ஜன. 22) தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள சீவலப்பேரி சுடலை மாட சாமி கோயிலுக்கு வந்துள்ளார்.
அப்போது சுதர்சனின் மகன் ஜோதிமணி (17) மற்றும் இரண்டு சிறுவர்கள் சேர்ந்து கோயில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துள்ளனர். ஜோதிமணி ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவனுடன் குளித்த மற்ற இரண்டு சிறுவர்களும் ஜோதிமணியை தேடியும் நீண்ட நேரமாக கரை திரும்பவில்லை. தகவலறிந்து பதறிப்போன சுதர்சன் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார்.