கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பம்மம் கல்லுதொட்டியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் அஜின் (26). இவர் மெக்கானிக் தொழில் செய்து வந்தார். அஜின் கோட்டாறில் இருக்கும் தனது உறவினரை பார்பதற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
உறவினரை பார்த்து விட்டு பின்னர் அஜின் இருசக்கர வாகனத்தில் வீடு திருப்பிக்கொண்டிருந்தபோது சுங்கான்கடையை அடுத்த களியங்காடு பகுதியில் வந்தபோது எதிரே திருவனந்தபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்துகொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் அஜின் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து காரணமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.